| # | தலைப்பு | விவரம் |
|---|---|---|
| 1 | கடன் வகை | வீடு அடமானக் கடன் |
| 2 | கடன் வழங்கும் காரியங்கள் | A.உச்ச அளவு ரூ20/- லட்சம் வரை 1.திருமணச் செலவு 2.கல்விச் செலவு 3.மருத்துவ செலவு 4.வியாபார அபிவிருத்தி 5.பதிவுபெற்ற முன் கடன் தீர்த்தல் 6.வீடு புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல் |
| 3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும் |
| 4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.விண்ணப்பதாரர் நிரந்தர பணியில் உள்ளவராகவோ/தொழில் செய்யபவர்களாகவோ / தொடர்ந்து நிரந்தர மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும். B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும். |
| 5 | அனுமதிக்கும் கடனின் அளவு | உச்ச அளவு ரூ20/- லட்சம் வரை |
| 6 | வருமானம் | A.மனுதாரர் மாத ஊதியம் பெறுபவராக இருந்தால், வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் மொத்த ஊதியத்தில் 30% குறையாமல் இருக்க வேண்டும். B.மனைவி/கணவன்/மகன்/மகள் வருமானமும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு சான்று இணைக்க வேண்டும். |
| 7 | மனுதாரரின் சொந்த நிதி | ------ |
| 8 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
| 9 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி. தற்போது Floating Rate (EMI/Simple) & Fixed Rate (EMI/Simple) வழங்கப்படுகிறது. |
| 10 | தவணைக் காலம் நிர்ணயம் | 10 ஆண்டுகள். |
| 11 | தவணைத் தொகை செலுத்தும் முறை | EMI தொகையை ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும். |
| 12 | அபராத வட்டி | 3 சதவீதம் |
| 13 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | வீடு மற்றும் வீட்டுடன் கூடிய இடம். இணைந்து விண்ணப்பம் கொடுப்பவர்கள், அடமானத்தில் வாரிசுகளையும் காட்ட வேண்டும். அடமானத்திலும் புரோநோட்டிலும் கூட்டாக கையொப்பமிட வேண்டும். |
| 14 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | A.சொத்து பத்திரம், B.பட்டா, C.வில்லங்கச்சான்று, D.அடங்கல் பதிவேடு, E.Blueprint, F.மதிப்பீடு அறிக்கை, G.ஊராட்சி ஒப்புதல் சான்று, H.வருவாய் சான்று, I.கட்டட வயது சான்று, J.வருமானவரி படிவம், K.அடையாள அட்டை, L.புகைப்படங்கள், M.சொத்துவரி ரசி, M.மின்சார ரசீது, N.முகவரி சான்று, O.வருமான சான்று, P.வங்கி statement, Q.அசல் ஒப்பந்தம், R.அசல் பட்டா, S.CIBIL அறிக்கை, T.வங்கி கோரும் இதர ஆவணங்கள். |
| 15 | காப்பீடு | A.வீடு நெருப்பு/வெள்ளம்/புயல் உள்ளிட்ட காப்பீடு செய்ய வேண்டும். B.பாலிஸி வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும். C.கடன்தாரர் விருப்பினால் கூடுதல் காப்பீடு ஏற்பாடு செய்யலாம். |
| 16 | சட்ட ஆலோசகர் மற்றும் GST கட்டணம் | சட்ட ஆலோசகர் கட்டணம் ரூ1,750 + GST |
| 17 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
